ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கம் ஒன்றை நடத்தி செல்ல மொட்டுக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம். அதேபோன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இல்லாவிட்டாலும் அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியாது.
நாங்கள் இல்லாவிட்டால் 113 இல்லை. யாரையும் ஒன்று சேரத்துக்கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி செல்வார்.
ஆனால் எங்களை ஒருபுறம் வைத்துவிட்டு செல்ல முயற்சித்தால் அரசாங்கம் ஒன்று இல்லை.
அதிகமானோர் தற்போது மொட்டு கட்சியில் இருந்தும் விலகி இருக்கின்றார்கள்.
மொட்டுக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் தற்போது ஜனாதிபதியுடன் ஒன்று சேர்ந்துள்ள தரப்பினரும் ஒன்றினைந்தால் மட்டுமோ முறையாக ஆட்சியை நடத்த முடியும்.
ஆட்சி செய்வதென்றால் ஆட்சி நடத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்குவதென்றால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றும் செய்யாமல் விலகி இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.