சுவெல்லா பிரேவர்மென் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து கடுமையாக பேசியிருந்த சுவெல்லா பிரேவர்மென், உள்துறை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
2016 ல் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு தோல்வியை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிய டேவிட் கமரூன் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய பொறுப்புக்கு டேவிட் கமரூனுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.