2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கையை நீண்ட கால அடிப்படையில் முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டது என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறுகிய காலத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நீண்ட கால ஸ்திரத்தன்மைக்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போது விடுத்த பிரகடனத்தின் அடிப்படையில் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கும், வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.