2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமான இந்த விவாதம் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதம் 23 திகதி புதன்கிழமை தொடங்கி டிசம்பர் 13 வரை நடைபெற்று வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் வெளி வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.