ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம் ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் ஜனாதிபதி சில்லறை வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருட வரவு செலவு திட்டம் நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டம் பற்றி பேசுவதற்கு முன்னர் 2022 வரவு செலவு திட்ட பிரேரணையின் உள்ளடக்கங்கள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.