யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியானது, கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவுடன் இணைந்து நடத்தும் கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடானது கல்வியியற் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
கல்வியியற் கல்லூரி வரலாற்றில் முதல் முதலாக தமிழ்மொழி மூலம் நடைபெற்ற கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு மாநாட்டுக்கு வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மங்களேஸ்வரன், பேராசிரியர் மேனாள் பீடாதிபதி சசிகலா குகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது செயல்நிலை ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த 10 பேரின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.