கம்பளை கல்வி அலுவலகத்தின் கழிவறையில் இருந்து சடலமொன்று நேற்று மாலை(13) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கம்பளை கல்வி அலுவலகத்தில் பல்பணி உதவியாளராக கடமையாற்றிய ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.