உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி இத்தாலி வீரர் ஜொனிக் சின்னர் வெற்றிபெற்றுள்ளார்.
உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் டுரினில் நடைபெற்று வருகின்றது.
அதன்படி உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் இத்தாலியின் ஜொனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பத்தில் மிக சிறப்பிக்க விளையாடிய ஜொனிக் சின்னர் முதல் சேட்டை 7-5 என கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
இதன்பின்னர் சுதாகரித்துக்கொண்ட நோவக் ஜோகோவிச் டை பிரேக் வரை நீடித்த இரண்டாவது செட்டை 7-6 நீ கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவருமே தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி செட் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
அதன்படி இறுதி செட்டும் டை பிரேக் வரை நீடிக்க அதனை 7-6 என கைப்பற்றிய ஜொனிக் சின்னர், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்சிற்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.