பொதுமக்களிடையே பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தனது தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது எனவும் தேர்தல் திகதி நெருங்குவதால், காங்கிரஸ் கட்சியின் பொய்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரையில் செய்த ஊழல் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் குறித்த தேர்தல் இடம்பெறும் என தான் நம்புவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.