இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் குடியுரிமை தொடர்பாக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இரண்டு வாரங்களின் பின்னர் அவர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றுள்ளதால், அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்க தகுதியற்றவர் என தெரிவித்ததே ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் கொண்ட அமர்வு கடந்த மாதம் 31 ஆம் திகதி கட்டணத்திற்கு உட்பட்டு அந்த முவை தள்ளுபடி செய்தது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என உத்தரவிட கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.