இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் தான், இலங்கை அணியின் வீரர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் கருத்து வெளியிட்டிருந்தார்.
வைத்தியரால் செலுத்தப்பட்ட ஊசிகளினால் வீரர்களின் பாதங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
குறித்த அந்த வைத்தியர் தொழில்முறை விளையாட்டு வைத்தியர் அல்ல என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் வெளிப்படுத்தினார்.
இதன்போது வீண் செலவு செய்வதை நிறுத்துமாறும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்வதில் வெளிப்படைத் தன்மையைப் பேணுமாறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு கோப் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதேநேரம், மேலும் 3 நாட்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை அழைக்கவும் கோப் குழு தீர்மானித்துள்ளது.