பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி இடம்பெறும் என பங்களாதேஸ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி பங்களாதேஷ் தலைநகரான டாக்கா பகுதியில் தொடந்தும் போராட்டங்கள்; முன்னெடு;க்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷின் எதிர்க்கட்சிகளால் குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய ஆட்சியில் நியாயமான தேர்தல் நடத்தப்படுவது சாத்தியமற்ற விடயம் என்றும் பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், காபந்து அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது,