மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுடன் மாலைதீவின் வெளியுறவுக் கொள்கையை ஈடுபடுத்த விருப்பம் இல்லை என்றும் புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்கிக்கொள்ள மாலைதீவு மிகவும்
சிறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலைதீவு ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.