அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு டானியல் மெட்வெடேவ் தகுதி பெற்றுள்ளார்.
உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் டுரினில் நடைபெற்று வருகின்றது.
அதன்படி இன்றையதினம் இடம்பெற்ற ரெட் குரூப் ஒற்றையர் பிரிவு போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் டானியல் மெட்வெடேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
அலெக்சாண்டர் ஸ்வெரேர் கடும் நெருக்கடி கொடுத்த போதும் டை பிரேக் வரை நீடித்த முதல் செட்டை 7-6 என டானியல் மெட்வெடேவ் கைப்பாற்றினார்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற அடுத்த செட்டில் எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளதாக டானியல் மெட்வெடேவ் 6-4 என செட்டை கைப்பற்றி வெற்றிபெற்றார்.
முன்னதாக நடைபெற்ற போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி ஒரு வெற்றியையும் டானியல் மெட்வெடேவ் நேர் செட்களில் அண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை ரஷ்ய வீரர் டானியல் மெட்வெடேவ் எதிர்கொள்ளவுள்ளார்.
இதேவேளை இன்று இடம்பெறவுள்ள கிரீன் குரூப் ஒற்றையர் பிரிவு போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மற்றும் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.