ஈரானிய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஹெஸ்பொல்லாவின் செயல்பாடுகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நாடு முழுவதும் இன்று 54 இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக ஜேர்மனியின் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் இஸ்லாமிய மையமான ஹம்பேர்க் உள்ளிட்டிட இடங்களில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-லெபனான் எல்லை வழியாக இஸ்ரேலுடன் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திய லெபனானின் ஈரான் ஆதரவு இயக்கமான ஹெஸ்பொல்லா போராளிக் குழு, ஜேர்மனியில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகத்தில் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து வருவதாகவும் ஜேர்மனின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.