நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை ஒரு குழுவினர் அன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், அரசமைப்பிற்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கையொன்றை உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியுமா என கேள்வி எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து, விவாதம் செய்து, பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியே அரசாங்கம் கொள்கைகளை தயாரிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசமைப்பின் 29 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்கப் போகிறோமா அல்லது அதனை சவாலுக்கு உட்படுத்தப் போகிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புக்களை மதிப்பதாகவும் இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தெரிவித்த நாமல் ராஜபக்ஷ நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதை தாமும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.