பேருந்தின் மிதி பலகையில் பயணித்த பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிச் செல்லும் அரச பேருந்தில் பயணித்த 56 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (20 ) காலை சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்டுகம விமானப்படை வீதித் தடைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்தின் போது காயமடைந்த மற்றொரு நபரும் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.