சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெள்ளை சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து நாடு முழுவதும் சிவப்பு சீனியை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா சீனி நிறுவனத்தின் பணிப்பாளர் காமினி ராசபுத்ர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இதன்படி, அடுத்த சில நாட்களில் அரிசியை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.