தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒவ்வொரு இலங்கையரும் எதிர்காலத்தில் வரிக் கோப்புகளைத் திறக்க வலியுறுத்தப்படலாம் என அரசாங்க உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு தனது 2023 வரவு செலவுத் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் முதல் கட்டமாக வரிக் கோப்பினைத் திறக்குமாறு வலியுறுத்தினார்.
வரி செலுத்தும் 18 வயதுக்கு மேற்பட்ட 16 மில்லியன் பேரில், 2023 ல் இதுவரை 198,253 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
இந்த யோசனை முன்மொழிவு மட்டத்தில் மட்டுமே இருப்பதாகவும் புதிய அடையாள அட்டை வந்த பின்னர் எதிர்காலத்தில் இது சாத்தியமாகும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக வரி வருவாயை அதிகரிக்கத் தவறிய நிலையில் அதனை அதிகரிக்க 2024 வரவு செலவுத் திட்டத்தில் வருவாய் அதிகார சபையை நிறுவ ஜனாதிபதி முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.