எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அடுத்த மாதத்தில் 1 இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அடுத்த மாதத்தில் 1 இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுள்ளோம்.
ஆகவே கூடிய விரைவில் அரிசி இறக்குமதியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விசேடமாக கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கின்றோம்.
அதனூடாகவும் நாட்டில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை எனின் தொடர்ந்தும் அதிகளவான அரிசிகளை இறக்குமதி செய்தாகிலும் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.
நாட்டிலுள்ள பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிக இலாபம் ஈட்டுவதற்காக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.
ஆகவே அடுத்த வாரத்தில் இருந்து அரிசி இறக்குமதி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.