தென் செங்கடலில் பகுதியில் சரக்குக் கப்பலை ஆயுதமேந்தியவர்கள் கைப்பற்றுவதைக் காட்டும் வீடியோவை யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் கப்பலின் கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளதோடு யேமன் மற்றும் பாலஸ்தீனிய கொடிகளை கப்பலில் பறக்கவிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரான் ஆதரவுக் குழுவால் கடத்தப்பட்ட குறித்த கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடையது என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் கைப்பற்றப்பட்ட கப்பல் பிரிட்டனுக்கு சொந்தமானது என்றும் ஜப்பானியர்களுக்கு சொந்தமானது என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.