காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதை பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த கட்டார் உறுதிப்படுத்தியுள்ளது.
கட்டாரின் வெளிவிவகார அமைச்சினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எப்போது குறித்த நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஆரம்பமாகும் என்பது தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் அறிவிப்பதாக கட்டார் அரசாங்கம் கூறியுள்ளது.
காசா பகுதியில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பொதுமக்களை விடுவிப்பது இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.
இதேநேரம் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கவும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.