கிரிக்கெட்டில் பந்துவீச்சு நேரம் தொடர்பாக புதிய விதியை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தயாராகி வருகிறது.
அதன்படி, ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த கடிகாரம் பயன்படுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.
முந்தைய ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும் என்றும் அதனை மூன்று தடவைகள் மீறினால் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைமை நிர்வாகிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஆண்களுக்கான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு மட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கான ஆரம்பகட்ட சோதனைகள் அடுத்த மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.