காஸாவில் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் பலஸ்தீன கைதிகளின் உறவினர்களை பாப்பரசர் பிரான்சிஸ் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்
இதன்போது கருத்து தெரிவித்த பாப்பரசர் பிரான்சிஸ் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் போரை தாண்டி நாம் சென்றுவிட்டோம். இனி எப்போதும் இது போராக இருக்க முடியாது என்றும் அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.