எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஜி 20 மாநாட்டின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஜி 20 மாநாடு தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற கொள்கையின்படி, உலக அமைதியை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நீடித்த பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மனித நேய அணுகுமுறையுடன் பிரேசில் ஜி 20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.