நாடாளுமன்றத்தில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிய போது இடம்பெற்ற சம்பவம், தொடர்பில் தாம் கவலையடைவதாக, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் எதிர்கட்சி தலைவர் உரையாற்றிய போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், அவ்வாறு நடந்திருக்கக் கூடாது எனவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் செயற்பாடு நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் அமைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.