தற்போதைய கேள்வி மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கலால் உற்பத்தி உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகமானோர் கூறுகின்றார்கள் கலால் உற்பத்தி உரிமம் நண்பர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் வழங்கப்படுகின்றது என்று.
கலால் உற்பத்திக்கான அனுமதி பத்திரம் வழங்கும் போது அதற்கான கேள்விக்கு அமைவாக கட்டணம் அறவிடப்பட வேண்டும்.
இந்த வருடத்தில் அரச வருமானத்தில் 10 வீத்தை எட்ட முடியும் அதேபோன்று அடுத்த வருடத்தில் 12 வீதத்தை அடைய எதிர்பார்க்கின்றோம்.
இவை அனைத்தையும் இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே முன்னெடுக்கின்றோம்.
10 வருடங்களுக்கு மேலாக கலால் உரிம அனுமதிப் பத்திரத்திற்கான கட்டணமாக மிகவும் பழமையான கட்டணமாகவே அறவிடப்படுகின்றது.
ஆகவே தற்போதை கேள்வி மற்றும் சந்தைக்கு பொருந்தும் வகையில் கலால் உரிம அனுமதி பத்திரத்திற்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான சாதகமான காரணிகளே இம்முறை வரவு செலவு திட்டத்தில் காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.