விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்றபோதே “வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்” பற்றி 2020 ம் ஆண்டு எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்காகவே விருது வழங்கப்பட்டது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய ஆராய்ச்சி சபையால் வருடாந்தம் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது-