எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக எதிர்க்கட்சிகள் அடுத்த தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரத்தை பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை எனவும், ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தான் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால், இன்னும் சில மாதங்களுக்கு முன்னதாகவே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.