மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 2008ம் ஆண்டு 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.
300 பேர் காயம் அடைந்தனர். அந்த இரவின் பயங்கரத்தை நேரில் கண்ட பலரும் இன்னும் அதன் பாதிப்பிலிருந்து விடுபடாத நிலையிலேயே உள்ளர்.
இந்த மும்பையில் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.