உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் 4 மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் குறித்த பத்திரிகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பாகவே நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புலிகளின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரத்தமைக்காக 2020ஆம் நவம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி பிரசாத் பொர்ணான்டோ உதயன் பத்திரிகை ஆசிரியர், உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
வழக்கு விசாரணைகளை நடைபெற்று வந்த நிலையில், பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இருந்த போதிலும் குறித்த வழக்கு நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.















