ஜெருசலேம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளது.
மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய இருவரால் ஜெருசலேமின் நுழைவாயிலில் உள்ள பேருந்து நிலையத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்றும் அவர்களது காரில் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் ஜெருசலேமில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதலை கண்டிப்பதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.