மேலதிக வாக்குமூலத்தைப் பெறுவதற்காக இன்று காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களால் விமர்சனத்திற்கு உள்ளான பேதகரிடம் நேற்று சுமார் 08 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இலங்கைக்கு வந்த 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் முன்னிலையாகியிருந்தார்.
நாட்டிற்கு வரும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கியது செய்ய வேண்டாம் என கடந்த 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு தொடர்பில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.