ஹமாஸுடனான நீடிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ் மேலும் 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஏழாவது நாளான நேற்று (வியாழக்கிழமை0 மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸால் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஹமாஸுடன் இணைந்த ஊடகங்களால் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.