ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ‘இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்குகிறது என்பதில் தனக்கு கடுமையான சந்தேகம் உள்ளது’ என்று கூறியதையடுத்து, அவர் இஸ்ரேலுடனான இராஜதந்திர மோதலை ஆழப்படுத்தியுள்ளார்.
அவரது சமீபத்திய கருத்து மூர்க்கத்தனமானது என இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையின் போது ‘பாலஸ்தீனியர்களை கண்மூடித்தனமாக கொன்றதாக’ அவர் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
ஸ்பானியத் தலைவரின் சமீபத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறியதற்குப் பதிலளித்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், மெட்ரிட்டில் உள்ள இஸ்ரேலின் தூதர் ரோடிகா ரேடியன்-கார்டனை ஆலோசனைக்காக திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக, இஸ்ரேலுக்கான ஸ்பெயினின் தூதுவர் கண்டிப்பதற்காக அழைக்கப்பட்டார்.
சான்செஸ் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் புதிய பிரதமராக பதவியேற்றார், ஆனால் அவர் ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடையே மிகவும் வெளிப்படையாக விமர்சிப்பவர்களில் ஒருவரானார்.
கடந்த வாரம் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, தனது புதிய அரசாங்கம் ஐரோப்பாவிலும் ஸ்பெயினிலும் பாலஸ்தீனிய அரசாங்கத்தை அங்கீகரிப்பதற்காக வேலை செய்யும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஸ்பெயின் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவியை வகிக்கிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, அதை ஒழிப்பதே இலக்கு என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஒக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான எல்லை வேலியை தீவிரவாதிகள் உடைத்ததில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 240க்கும் மேற்பட்டோர் பணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அதற்குப் பிறகு, இஸ்ரேலின் பதிலடியில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
;.