இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கப்படுவதற்கான காலக்கெடு குறித்த எந்த உடன்பாடும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதேநேரம் பாலஸ்தீன குழுக்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு காசா பகுதியில் உள்ள நுசிராட் மற்றும் புரேஜ் அகதிகள் முகாம்களுக்கு அருகில் இஸ்ரேலிய படைகள் ஷெல் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.