அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்ற இடைக்கால தடை உத்தரவை நீடிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வதிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி தாக்கல் செய்திருந்த வழக்கு,நேற்று மீண்டும் விசாரணக்கு வந்த போது, இடைக்கால தடை உத்தரவை தொடர்ந்தும் நீடிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது.
இதனை அடுத்து, விசாரணையை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, தடை உத்தரவை மீறக் கூடாது என்றும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.