காசா பகுதியின் தெற்கில் உள்ள ரஃபாவில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து போர்நிறுத்தம் நிறைவடைந்த பின்னர் இன்று காலை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், போர் நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து, லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் அமைதி நிலவுகிறது.
இஸ்ரேலும் ஹெஸ்பொல்லாவும் ஒக்டோபர் 7 முதல், போர்நிறுத்தம் தொடங்கும் வரை தினமும் எல்லையில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது அமைதி நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.