சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று இடமபெற்ற போதே உயர் நீதிமன்றம் ஆளுநர் தரப்பில் ஆஜரானவர்களுக்கு இதனை அறிவித்துள்ளது.
மேலும் முதலமைச்சரும் ஆளுநரும் அமர்ந்து பேசி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.