காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கையின் அவசியத்தை மூன்றாம் சார்லஸ் மன்னர் வலியுறுத்தியுள்ளார்.
மனிதகுலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில், உலகத் தலைவர்கள் இலட்சியத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலநிலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் சில முன்னேற்றங்களை வரவேற்ற மன்னர், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உலகம் தடம் புரண்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உண்மையான மாற்றத்திற்கான மற்றொரு முக்கிய திருப்புமுனையாக COP28 இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பூமி நமக்கு சொந்தமானது அல்ல என்றும் நாங்கள் தான் பூமிக்கு சொந்தமானவர்கள் என்றும் பேசி தனது உரையை முடித்திருந்தார்.