இந்த வருடத்தோடு முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று (01) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கைத்தொழில் , வர்த்தகம், மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் வரவு செலவுத் தலைப்புகள் நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டக் குழுவின் போது விவாதிக்கப்பட்டதுடன் கல்வி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்டம் இன்று விவாதிக்கப்படவுள்ளது.;