மன்னார் பிரீமியர் லீக் தொடரின் போட்டி நேற்று (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையே இடம்பெற்ற இப்போட்டியில் அயிலன் FC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
முதல் நிலையை பெற்றுக்கொண்ட அணிக்கு 10 லட்சம் ரூபாவும்,2வது இடத்தை பெற்றுக் கொண்ட அணிக்கு 5 இலட்சம் ரூபாவும் பணப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கான நிதி அனுசரணையை சிறி சபா ரத்தினம் அறக்கட்டளை வழங்கியது.
குறித்த போட்டியில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னால் வடமாகாண செயலாளர் பத்திநாதன்,அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ்,மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.