ஜெனின் மற்றும் அங்குள்ள அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் 29 மணிநேரமாகத் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நப்லஸ், ஹெப்ரோன், பெத்லஹேம் மற்றும் ரமல்லாவின் புறநகர்ப் பகுதிகளிலும் மேற்குக் கரை முழுவதும் சோதனைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை 100 பாலஸ்தீனியர்கள் வரை கைது செய்யப்பட்டிருக்கலாம் என பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.