வளர்ச்சியடைந்த இந்தியா உருவாவதற்கு சிறுநகரங்களின் வளர்ச்சியே முக்கியமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா சபத யாத்திரையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதன்போது மத்திய அரசுத் திட்ட பயனாளிகளிடையே பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுதந்திரத்துக்குப் பின்னர் நீண்ட காலமாக வளர்ச்சியின் பயன்கள் சில பெரிய நகரங்களுக்கு மட்டுமே கிடைத்தன.
ஆனால், எனது அரசு சிறு நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அதுதான் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வெகுவாக வலுப்படுத்தும்.
மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை அனைவரும் பெற வேண்டும். வளர்ந்த இந்தியா சபத யாத்திரை நான் தொடங்கி வைத்தாலும், இன்று அந்த யாத்திரையை நாட்டு மக்கள்தான் வழிநடத்துகிறார்கள்.
இந்த யாத்திரை முடியும் இடத்தில் அங்குள்ள மக்கள் தங்கள் யாத்திரையை தொடங்குகின்றனர்.
நாட்டில் தற்சார்புப் பெண்கள், அவர்களை மட்டும் காத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் வரமாக இருக்கின்றனர்.
அதேபோல் கடினமாக உழைக்கும் மக்களுக்கும், எனது அரசு அயராது உழைத்து வருகின்றது” என பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.