செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால் குறித்த பாதை வழியாக தங்கள் கப்பல்கள் பயணிப்பதை முன்னணிக் கப்பல் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து டென்மார்க்கில் தலமையகத்தைக் கொண்டு செயற்பட்டு வரும் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
எனவே, அந்தக் கடல் பாதை வழியாக நிறுவனத்தின் கப்பல்கள் இயக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல்கள் மீது ஹ_தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால் அவர்களுக்கோ, காஸாவில் போரிடும் ஹமாஸ் அமைப்பினருக்கோ இராணுவ ரீதியில் எந்தப் பலனும் கிடைக்காது.
இருப்பினும், உள்நாட்டில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக்கொள்வதற்காக இத்தகைய தாக்குதல்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.