யாழ் மாநகர சபையானது அடாவடியாகச் செயற்படுவதாக யாழ் வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு அங்கமாக வட மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையினரால் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு கடைகளுக்கும் நாளொன்றுக்கு தலா 1000ரூபாய் வரி கட்ட வேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபையினால் அறிவித்தல் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய யாழ் வணிகர் கழகம் ” குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் ”வட மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடுஉள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி இலவசமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையானது அடாவடியாக செயற்படுகின்றது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.