பிரித்தானியாவின் ராணியான கமிலா, அண்மையில் வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) ஒலிவியா டெய்லர் என்ற 7 வயதுச் சிறுமியுடன் தேநீர் அருந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மூளைக் கட்டியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுமி, தற்போது தனது கண் பார்வையையும் இழந்துள்ள நிலையில், தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கீமோதெரபியில் செலவழித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.