எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அது வெதுப்பாக உரிமையாளர்களை பாதிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் வெதுப்பாக உற்பத்திகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து வட் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறை பாதிக்கப்படலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது 15 சதவீதமாக காணப்படுகின்ற வரியியால் பாதிப்படைந்த வெதுப்பக தொழிற்துறைக்கு 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் புதிய வரி திருத்தத்துக்கு அமைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படுமாயின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெதுப்பக உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடையும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.