களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (26) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த கைதி கரவிட்ட மொல்காவ பிரதேசத்தில் வசித்து வந்த பி.ஜி. சுனில் என்ற 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (24) களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.