95,000 க்கும் மேற்பட்டோருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் வரை நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியுடன் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 95,241 எனவும், சுமார் 12.97 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை மக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.